×

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே போதிய பாதுகாப்பற்ற நிலையில் திறந்த வெளியில் காணப்படும் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த கீழதேனூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 180 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இப்பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. இதனால், இந்த பள்ளி மைதானத்தின் அருகே விவசாய நிலங்கள் அப்படியே தெரிகின்றன. கிராம விவசாயிகள் பள்ளி மைதானத்தை தங்களது நிலப்பகுதிகளுக்கு செல்லும் வழியாக பயன்படுத்துகின்றனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் பள்ளி வளாகத்தில் தாறுமாறாக சுற்றித்திரிந்து வருகின்றன. மேலும், மன்னர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டு, இன்றளவும் தஞ்சாவூரான் சாலை என்றழைக்கப்படும் திருவண்ணாமலை-தியாகதுருகம் இடையேயான சாலையில் இந்த பள்ளி அமைந்துள்ளது. இதனால் பல வகையிலும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதையடுத்து பள்ளியின் நலன் கருதி சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது….

The post பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Rishivantiyam ,Dinakaran ,
× RELATED வடமாமந்தூர் – இளையனார்குப்பம் சாலை ஆக்கிரமிப்பால் தொடரும் விபத்து