×

வறுமையிலும் நேர்மை: திரு.மாணிக்கம் பற்றி சமுத்திரக்கனி

சென்னை: ஜிபிஆர்கே சினிமாஸ் சார்பில் ரேகா ரவிகுமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ள படம், ‘திரு.மாணிக்கம்’. நந்தா பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார். வரும் 27ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விக்ரமன், லிங்குசாமி, சரண், அமீர், இ.வி.கணேஷ் பாபு மற்றும் அனன்யா, தம்பி ராமய்யா, சாம்ஸ், வடிவுக்கரசி, ரவிமரியா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது சமுத்திரக்கனி பேசியதாவது: முன்பெல்லாம், கெட்டவர்களிடம் சேராதே. வம்பில் இழுத்து விட்டுவிடுவார்கள் என்று சொல்வார்கள்.

இப்போது நல்லவனைப் பார்த்து அப்படிச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். எவ்வளவு வறுமை இருந்தாலும், கடைசிவரை நேர்மையாக வாழ்ந்த ஒருவனின் கதையாக ‘திரு.மாணிக்கம்’ உருவாகியுள்ளது. ‘நாடோடிகள்’ படத்தில் நடிப்பதற்காக நான் கண்டுபிடித்த அனன்யா, இதில் எனக்கே ஜோடியாகி சிறப்பாக நடித்திருக்கிறார். பாரதிராஜா, வடிவுக்கரசி, நாசர் உள்பட அனைவரும் நடிப்பில் அசத்தியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி ஆகிய பகுதிகளை ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கேமரா அற்புதமாகப் படமாக்கியுள்ளது.

Tags : Chennai ,Rekha Ravikumar ,Zinta Gopalakrishna Reddy ,Raja Senthil ,GPRK Cinemas ,Nanda Periyasamy ,Vikraman ,Lingusamy ,
× RELATED குப்பை கழிவுகளை வீசுவதை தடுக்க...