×

சூரிய கிரகணமும் 6 கிரக சேர்க்கையும்: பாதிக்கப்பட உள்ள நட்சத்திரங்களும், கிரகண தோஷம் நீங்க சில வழிபாடு முறைகளும்

சூரிய கிரகணம் என்றால் என்ன?

சந்திரன் பூமியையும்,. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன்- பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் (Solar Eclipse) என்ற நிகழ்வு ஏற்படுகின்றது.

சூரிய கிரகணமும் 6 கிரக சேர்க்கையும்

சூரிய கிரகணம் ஏற்படக் கூடிய டிசம்பர் 26ம் தேதி தனுசு ராசியில் சனி,கேது, சூரியன், குரு, புதன், சந்திரன் ஆகிய 6 கிரகங்கள் ஒரே ராசியில் சஞ்சரிக்கின்றன.6 கிரகங்களின் சேர்க்கை அப்போது நடப்பதால் எந்த ஒரு பாதிப்பும் நமக்கு ஏற்படாது. இது ஒரு சாதாரண நிகழ்வு. அடிக்கடி பல முறை இதுபோன்ற நிகழ்வு நடந்து வருகின்றது. இதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

முடிந்த வரை கிரகண நேரத்தில் வெளியில் வருவதை தவிர்த்துக் கொண்டாலே போதும்.சூரிய கிரகணம் நிகழும் அதே நாளில் டிசம்பர் 26ஆம் தேதி மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் என்பதால் அன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.

கிரகணம் எப்போது?

விகாரி வருடம் மார்கழி மாதம் 10 தேதி (26.12.2019) வியாழக் கிழமை சர்வதேச நேரப்படி அதிகாலை 02.29 முதல் காலை 8.05 மணி வரை நீடிக்கின்றது.இந்திய நேரப்படி காலை 07:05 மணி முதல் மதியம் 01.35 மணி வரை நீடிக்கின்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவிலும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த நட்சத்திரத்திற்கு கிரகணம் பிடிக்கிறது?

சூரிய கிரகணம் மூலம் நட்சத்திரத்திற்கு பிடிக்கின்றது. ஏற்கனவே 4 கிரகங்கள் உள்ள தனுசு ராசியில் மூல நட்சத்திரம் இருக்கின்றது. இதனால் மேலும் சிக்கல் ஆகுமோ என்ற எண்ணம் வேண்டாம்.மூல நட்சத்திரத்திற்கு முன் மற்றும் பின் உள்ள நட்சத்திரங்களான கேட்டை மற்றும் பூராடம் ஆகிய நட்சத்திரத்தினருக்கு தோஷம் பிடிக்கின்றது.

மூல நட்சத்திர அதிபதி கேது, கேட்டை அதிபதி புதன், பூராடம் அதிபதி சுக்கிரன் என்பதால், இந்த அதிபதிகள் ஆளும் மற்ற ராசியில் இருக்கும் நட்சத்திரத்தினரும் பரிகாரம் செய்ய வேண்டும். அதாவது அசுவினி, மகம் நட்சத்திரனரும் முறையாக வழிபாடு செய்வது நல்லது.

கிரகண தோஷம் ஏற்படும் நட்சத்திரங்கள்

மூலம் - கேது

கேட்டை - புதன்

பூராடம் - சுக்கிரன்

அஸ்வினி - கேது

மகம் - கேது

மேலும் இந்த அதிபதிகள் ஆளும் ராசிகளான

மிதுனம் - புதன்

ரிஷபம், துலாம் - சுக்கிரன் ஆகிய ராசிகள் தோஷம் உள்ளது. இவர்கள் கிரகண நேரத்தில் வழிபாடும், அதன் பின்னர் தோஷம் நீங்க சில முறைகளையும் பின்பற்றுவது நல்லது.

எப்படி வழிபடுவது?

கிரகணம் 8 மணிக்கு பிடிக்கின்றதென்றால் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே குளித்து தயாராகிவிடுங்கள்.
பின்னர் இந்த கிரகண நேரத்தில் நாம் என்ன நினைக்கின்றோமோ அதை வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். மறக்காமல் “ஸ்ரீ ராமஜெயம்” எழுதுங்கள்.

ஒரு நோட்டில் கிரகணம் முடியும் வரை ஜெய் ஸ்ரீ ராம் அல்லது, ராமா ராமா அல்லது ஸ்ரீ ராம ஜெயம் எழுதுங்கள்.ஏனென்றால் ராம நாமம் இருக்கும் இடத்தில் அனுமன் இருப்பார். அனுமன் இருக்கும் இடத்தில் நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சினைகள் அண்டாது.

கிரகணத்தின் பின் செய்ய வேண்டியவை:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகணம் முடிந்த பின் கடலில் அல்லது வீட்டிலேயே கல் உப்பு சேர்த்த நீரில் குளிக்க வேண்டும்.கிரகணம் முடிந்த பின்னர் கடலில் அல்லது வீட்டிலேயே கல் உப்பு சேர்த்த நீரில் குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இதனை செய்வது மிகவும் நல்லது. அதன் பின்னர் சுவாமி அறையை சுத்தம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு அடுத்த அடுத்த காரியங்களை மேற்கொள்ளலாம்.அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வாருங்கள். குறிப்பாக அனுமன் கோயிலுக்கு சென்று நீங்கள் எழுதிய ராம ஜெயம் வைத்து வழிபட்டு வருவது மிகவும் சிறந்தது. இப்படி செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

Tags : Stars ,Planets ,
× RELATED ஜோதிட ரகசியங்கள்