×

கொடி வழங்குதல் நிகழ்ச்சி காலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: ராஜரத்தினம் அரங்கத்தில், காவல் துறையினருக்குக் குடியரசு தலைவரின் கொடி வழங்குதல் விழா நடை பெறுவதையொட்டி இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ருக்குமணி லட்சுமிபதி சாலையில் காலை 7 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை பிற வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பாந்தியன் சாலையிலிருந்து ருக்குமணி லட்சுமிபதி சாலை வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் பாந்தியன் சாலை ரவுண்டானாவிலிருந்து பாந்தியன் மேம்பாலம் வழியாகச் சென்று கோ-ஆப்டெக்ஸ் பாய்ண்ட் வழியாக அவர்கள் செல்லவேண்டிய பகுதிகளை அடையலாம். எத்திராஜ் சாலை ருக்குமணி லட்சுமிபதி சாலை சந்திப்பிலிருந்து பாந்தியன் ரவுண்ட்டான நோக்கிச் செல்ல வேண்டிய வாகனங்கள் கோ-ஆப்டெக்ஸ் பாய்ண்ட் வழியாகப் பாந்தியன் சாலையினை அடையலாம். பாந்தியன் சாலை மாண்டியத் சாலை சந்திப்பிலிருந்து ருக்குமணி லட்சுமிபதி சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் பாந்தியன் சாலை வழியாக கோ-ஆப்டெக்ஸ் அல்லது பாந்தியன் ரவுண்டானா அடைந்துத் தாங்கள் செல்லவேண்டிய இடத்தினை அடையலாம்….

The post கொடி வழங்குதல் நிகழ்ச்சி காலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : presentation ,CHENNAI ,President of the Republic ,Police Department ,Rajaratnam Arena ,
× RELATED ஜெகதீப் தன்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து