×

ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு ரூபாய் நோட்டுக்கள் அலங்காரம்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் ஆடி திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டு ஆடி திருவிழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 8 நாட்களாக அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் நடைபெறுவதுடன் வீதியுலா நடைபெற்றது. 9வது நாளான நேற்று ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோயில் முகப்பு முதல் அம்மன் கருவறை வரை ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த ரூபாய் நோட்டுக்கள் அலங்காரத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து பரவசப்பட்டனர்.முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகளும் நடைபெற்றன. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கண்டு ரசித்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா பூவை. ஞானம் மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாக  செய்துள்ளனர். …

The post ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு ரூபாய் நோட்டுக்கள் அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Oothukattu Hahanayamman ,Poontamalli ,Aadi ,Oothukattu Behanayamman ,Kumananchavadi ,Uthukkatu Behanayamman ,
× RELATED பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில்...