×

சினிமாவா எடுக்குறாங்க பாலிவுட்காரங்க?: கங்கனா கடும் விமர்சனம்

மும்பை: சர்ச்சைக்குரிய பல கருத்துகளைப் பேசி திரையுலகிலும், அரசியலிலும் பரபரப்பு ஏற்படுத்தி வருபவர், கங்கனா ரனவத். தற்போது அவர் பாலிவுட்டினரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: பாலிவுட்டினர் ஒரு குமிழிக்குள் வாழ்கிறார்கள். பாலிவுட்டில் எனக்கு இருக்கும் சில முரண்பாடுகளுக்கு இதுவே முக்கிய காரணம். அவர்கள் இதுபோன்ற குமிழியில் இருந்து வெளியேற விரும்புவது இல்லை. அவர்களைப் பொறுத்தவரை தினமும் ஜிம்முக்குச் செல்ல வேண்டும், புரோட்டீன் ஷேக்ஸ் குடிக்க வேண்டும், அதற்கான ஊசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும்.

எப்போதுமே அவர்கள் யதார்த்தமாக வாழ்வது இல்லை. பாலிவுட்டில் இருந்து யாரும் ‘புஷ்பா’ படத்தின் 2 பாகங் களில் அல்லு அர்ஜூன் நடித்ததைப் போன்ற ஒரு கேரக்டரில் நடிக்க முன்வர மாட்டார்கள். சிக்ஸ்பேக்ஸ், அழகிய ஹீரோயின்கள், பீச், பைக், கவர்ச்சியான பாடல்கள் என்று, இதை மட்டும்தான் அவர்கள் விரும்புகிறார்கள். இனி அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

Tags : Bollywood ,Kangana Ranaut ,Mumbai ,Bollywood… ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்