×

சினிமாவையும், நடிகர்களையும் கருணையுடன் பாருங்கள்: மிஷ்கின் உருக்கம்

சென்னை: அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள படம், ‘அலங்கு’. இதை ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்களை இயக்கியிருந்த எஸ்.பி.சக்திவேல் இயக்கியுள்ளார். செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி ஆகியோருடன் முக்கிய வேடத்தில் நாய் ஒன்று நடித்துள்ளது. எஸ்.பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்ய, அஜீஷ் இசை அமைத்துள்ளார்.

வரும் 27ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலரை ரஜினிகாந்த் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் விதமாகவும், தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லைப்பகுதியில் நடந்த உண்மைச்சம்பவத்தை மையமாக வைத்தும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நாய் மீதான பாசத்தை மையப்படுத்தி திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசமும், உறவும் எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் மிகப்பெரிய பகையாக மாறுகிறது என்பதை படம் சொல்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் உருக்கமாகப் பேசினார். அவர் பேசியதாவது: சமீபத்தில் வெளியான பிரமாண்டமான ஒரு படத்தை கடுமையாக விமர்சித்து இருந்தனர். படம் நன்றாக இல்லை என்றால், ரசிகர்கள் அதிகமாக கோபப்படுகின்றனர். அது அவர்களின் உரிமை என்றாலும், திரைப்படங்களை நாம் இன்னும் கூட கருணையுடனும், பேரன்புடனும் பார்க்க வேண்டும். இதைச் சொல்ல நான் பயப்படவில்லை. ‘கங்குவா’ படத்தை நான் பார்க்கவில்லை. சூர்யா போன்ற நல்ல நடிகரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Tags : Chennai ,Anbumani Ramadoss' ,Sangamithra ,S.P. Sakthivel ,Semban Vinoth ,Kali Venkat ,Sarath Appani ,Srirekha ,Kotravai ,Regina Rose ,Shanmugam Muthusamy… ,
× RELATED துணைவேந்தர் நியமனம்.....