×

உடுமலை அருகே மலைப்பாதையில் சிகிச்சைக்காக கர்ப்பிணியை தொட்டிலில் தூக்கிச்சென்ற இளைஞர்கள்

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை வன சரகத்தில், குழிப்பட்டி, குருமலை உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். சாலை வசதியில்லாததால் அவசர மருத்துவ தேவைக்கு, அப்பர் ஆழியாறு, காடம்பாறை வழியாக, 55 கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. எனவே, கர்ப்பிணிகள், நோயாளிகளை தொட்டில் கட்டி, பல மணி நேரம் கரடுமுரடான பாதையில் தூக்கி வந்து, ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது உடுமலை அரசு மருத்துவமனைக்கு வர வேண்டியுள்ளது. இந்நிலையில் குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 4 மாத கர்ப்பிணி சரண்யாவுக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இளைஞர்கள் அப்பெண்ணை தொட்டில் கட்டி நகரப்பகுதிக்கு தூக்கி வந்தனர். இது குறித்து குழிப்பட்டி கிராம மக்கள் கூறுகையில், திருமூர்த்திமலை பொன்னாலம்மன் சோலையிலிருந்து, குழிப்பட்டி வரை 7 கி.மீ தூரத்தில், பாரம்பரிய வழித்தடம் இருந்தது. தற்போது வனத்துறையினர் கட்டுப்பாடு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை மேம்படுத்தி, நிரந்தர பாதை அமைத்து தர வேண்டும் என்றனர்….

The post உடுமலை அருகே மலைப்பாதையில் சிகிச்சைக்காக கர்ப்பிணியை தொட்டிலில் தூக்கிச்சென்ற இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Tirupur district ,Udumalai Forest Reserve ,Kulitpatti ,Kurumalai ,Dinakaran ,
× RELATED திருப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர்,...