×

திருப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று சாதனை!

திருப்பூர்: விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்து திருப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா பள்ளபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமு – பானுமதி தம்பதி. விவசாய தொழில் செய்து பள்ளபாளையம் கிராமத்தில் வசித்துவரும் இவர்களின் 24 வயதான மகன் முகிலன், சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை 2021 ஆம் ஆண்டில் முடித்துள்ளார். பின் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தன்னை தயார் செய்துகொண்டு வந்துள்ள அவர், தினமும் 10 மணி நேரம் வரை படித்து வந்துள்ளார்.

எனினும், கடந்தாண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்துள்ளார். தனது பாட்டி பல ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் விவசாய தொழிலை மேற்கொண்டு வருவதை கண்ட முகிலன், அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தன்னாலும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்துடன், கடந்த முறை செய்த தவறுகளை சரிசெய்துகொண்டு தீவிர பயிற்சி மேற்கொண்டு இந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 404வது இடத்தை பெற்றுள்ள அவர், கடின முயற்சியுடன் பயிற்சி மேற்கொண்டால், குடும்ப பின்னணி ஒரு தடையாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

 

The post திருப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று சாதனை! appeared first on Dinakaran.

Tags : Tirupur ,UPSC ,Ramu ,Banumathi ,Pallapalayam ,Udumalai ,Tirupur district ,
× RELATED திருப்பூரில் ரோட்டோரத்தில் சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்