×

வருண் தவானுடன் நடிக்கிறாரா: பூஜா ஹெக்டே சூசக பதில்

மும்பை: தமிழில் ஜீவாவுடன் ‘முகமூடி’, விஜய்யுடன் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, தொடர்ந்து இங்கு புதுப்பட வாய்ப்பு கிடைக்காத நிலையில், தெலுங்கு மற்றும் இந்திக்குச் சென்று பல படங்களில் நடித்தார். அதில் சில படங்கள் ஹிட்டானதை தொடர்ந்து அவருடைய சம்பளம் சில கோடி ரூபாய் அளவில் உயர்ந்தது. தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் ஜோடியாகவும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாகவும் நடித்து வரும் அவர், பாலிவுட்டுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் வருண் தவான் ஜோடியாக அவர் நடிக்கும் இந்திப் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தனது ேசாஷியல் மீடியாவில் பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள ஒரு போட்டோ இத்தகவலை உறுதி செய்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இது எங்கள் படத்துக்காக கூட இருக்கலாம்’ என்று கூறியுள்ளார். இது உறுதியானால், இந்தியில் முதல்முறையாக பூஜா ஹெக்டே, வருண் தவான் ஜோடி சேருவார்கள். தற்போது வருண் தவான் நடித்துள்ள ‘தெறி’ ரீமேக்கான ‘பேபி ஜான்’ என்ற இந்திப் படம், வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. இதன்மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகிறார்.

Tags : Varun Dhawan ,Pooja Hegde ,Mumbai ,Jeeva ,Vijay ,
× RELATED இரண்டாவது படத்திலேயே இயக்குனரான நடிகை