×

மருத்துவ உதவித்தொகை உயர்த்த கோரி கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னை: இறுதி ஆண்டு கால்நடை மருத்துவ மாணவர்களின், பயிற்சி மருத்துவ உதவித் தொகையை உயர்த்த கோரி, சென்னை வேப்பேரி மருத்துவ கல்லூரி மாணவர்கள் அமைதி வழி போராட்டம் நடத்தினர். கால்நடை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை ₹10 ஆயிரத்து 500 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்தி ₹25 ஆயிரமாக வழங்க வேண்டும், அதோடு ஆண்டுதோறும் 3 சதவிகிதம் உயர்த்த வேண்டும், அனைத்து கால்நடை மருத்துவ கல்லூரிகளிலும் உள்ள மாணவர்கள் சங்கம் முழுமையாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும், மாணவர் சங்கங்கத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கான பதவிகளும் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும், இந்த அமைதி வழி போராட்டத்தில் பங்குபெறும் எந்த மாணவர் மீதும் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்த பிறகே போராட்டம் நிறைவடையும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்வதாக கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்ததையடுத்து மாணவர்கள்  போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர். …

The post மருத்துவ உதவித்தொகை உயர்த்த கோரி கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Veterinary College ,CHENNAI ,Veperi Medical College ,
× RELATED 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு