×

உள்நாட்டு இடங்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த முடியும்: வெங்கய்யா நாயுடு

புதுடெல்லி: புதுடெல்லி நார்த் ஈஸ்ட் ஆன் வீல்ஸ்’ பயணத்தில் பங்கேற்ற 18 மாநிலங்களைச் சேர்ந்த75 இருசக்கர வாகன ஓட்டிகளிடம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று உரையாடினார். அப்போது அவர் சுற்றுலா செல்லும் இந்தியர்கள் வெளிநாட்டை விட உள்நாட்டு சுற்றுலா தலங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என தெரிவித்தார். இதனால் தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த முடியும் என அவர் கூறினார். இந்த உரையாடலின் போது துணை ஜனாதிபதி, வடகிழக்கு மாநிலங்களுக்கு தான் சென்ற பயண அனுபவங்களை பகிர்ந்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் அழகான நிலப்பரப்புகள், வளமான கலாச்சாரம் மற்றும் மக்களின் அன்பான விருந்தோம்பல் குறித்து அவர் பேசினார். சுற்றுலாவை விரும்புபவர்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று நமது கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையைப் ரசிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்…

The post உள்நாட்டு இடங்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த முடியும்: வெங்கய்யா நாயுடு appeared first on Dinakaran.

Tags : Venkaiya Naidu ,New Delhi ,New Delhi North East ,Venkaiah Naidu ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி