×

நிர்வாண போட்டோ ஷூட் ரன்வீருக்கு தீபிகா ஆதரவு: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட் குறித்து அவரது மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோன் கூறிய தகவல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிப்பு தவிர மாடலிங்கில் அதிக கவனம் செலுத்துகிறார். விலைஉயர்ந்த வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக்கொள்வது, போட்டோ ஷூட் நடத்துவது என்று மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்காக அவர் நடத்திய நிர்வாண போட்டோஷூட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மறைந்த அமெரிக்க நடிகர் பெர்னார்ட் ரெனால்ட்ஸ் என்பவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரன்வீர் சிங் இதுபோல் போஸ் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு பெர்னார்ட் ரெனால்ட்ஸ் இதுபோல் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியுள்ளாராம். தற்போது அவரைப் போலவே ரன்வீர் சிங் போஸ் கொடுத்துள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி ரன்வீர் சிங்கின் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனிடம் கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், ‘இந்த கான்செப்ட் குறித்து ரன்வீர் என்னிடம் சொன்னார். இது ஏதோ வித்தியாசமான கான்செப்ட் என்பதால் நான் அதிக ஆர்வத்துடன் காத்திருந்தேன். இந்த போட்டோ பத்திரிகையில் வெளியாகும் முன்பே நான் பார்த்து விட்டேன். அது எனக்கு பிடித்திருந்தது. ரன்வீர் எப்போதும் வித்தியாசமாக எதையாவது முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புவார். அவருக்கு எப்போதும் நான் துணையாக இருப்பேன்’ என்று பதிலளித்துள்ளார்.இந்த நிலையில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை போல் கோலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் தனது நிர்வாண போஸ்களை டிவிட்டரில் வெளியிட்டு, தனி நிர்வாண போஸ் கொடுக்கும் ட்ரெண்டிங்கில் இணைவதாக பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை தனது மனைவியும், பேட்மிண்டன் வீராங்கனையுமான ஜூவாலா கட்டா கிளிக் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து விஷ்ணு விஷாலின் இந்த செயலுக்கு இணையதளங்களில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை மிக வன்மையான வார்த்தைகள் மூலம் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்….

The post நிர்வாண போட்டோ ஷூட் ரன்வீருக்கு தீபிகா ஆதரவு: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Deepika ,Ranveer ,Mumbai ,Bollywood ,Ranveer Singh ,Deepika Padukone ,
× RELATED டீப் ஃபேக் வீடியோவால் அரசியல்...