×

மின்சார அலுவலகம் அமைக்க கோரிக்கை

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 23வது வார்டு புழல் கண்ணப்ப சாமி நகர், காவாங்கரை, திருமலை நகர், கன்னடபாளையம், திருநீலகண்ட நகர், சக்திவேல் நகர், பாலாஜி நகர், திரு.வி.க. தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான  வீடுகள் உள்ளன. இப்பகுதிகளில் தொழிற்சாலைகள், ஓட்டல் மற்றும் டீ கடைகள் உள்ளன. இப்பகுதி பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மின்சாரம் சம்பந்தமாக தகவல்கள், புதிய இணைப்புகள் பெறவும், மின் கட்டணம் செலுத்துவதற்கு 5 கிலோ மீட்டர் தூரமுள்ள பாலவாயல் சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று வர வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, புழல் காந்தி பிரதான சாலையில் உள்ள பழைய வருவாய்த்துறை அலுவலத்தில் புதிதாக மின்சார அலுவலகம் அமைத்து, பொதுமக்கள் பயன்பெற தமிழ்நாடு மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். …

The post மின்சார அலுவலகம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Madhavaram Zone 23rd Ward Puzhal Kannappa Sami Nagar ,Kavankarai ,Tirumalai Nagar ,Kannadapalayam ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சியில் இணைய வழியில்...