×

திருச்சியில் முதல் முறையாக மாநில துப்பாக்கி சுடும் போட்டி 1300 வீரர்கள் பங்கேற்பு

திருச்சி: இந்திய ரைபிள் கிளப் சங்கத்தின் கீழ் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரம் ரைபிள் கிளப்பின் 47வது மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி முதல்முறையாக திருச்சியில் நேற்று(24ம் தேதி) துவங்கியது. போட்டியை கலெக்டர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.போட்டியில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெறுகிறது. போட்டி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதிலிருமிருந்து 1300 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.நேற்று 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடு தளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர், இளைஞர், முதியவர் என வயது வாரியாக பிரிக்கப்பட்டு அதில் சப்யூத் (16 வயது வரை), யூத் (19 வரை), ஜூனியர் (21 வரை), சீனியர்(21 முதல் 45 வயது வரை), மாஸ்டர் (45 வயது முதல் 60 வயது வரை) மற்றும் சீனியர் மாஸ்டர் (60 வயதிற்கு மேல்) என தனித்தனி பிரிவில் போட்டி நடத்தப்பட்டது. மேலும் பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு நேற்று முதல் 28ம்தேதி வரையில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. 29ம் தேதி முதல் 31ம்தேதி வரை ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.இந்த போட்டியில் தகுதி சுற்றுக்கு முன்னேறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும். அதனை தொடர்ந்து இந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பர். தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் பல மாவட்டங்களில் காவல்துறையில் பணியாற்ற கூடியவர்கள் இந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்கின்றனர்….

The post திருச்சியில் முதல் முறையாக மாநில துப்பாக்கி சுடும் போட்டி 1300 வீரர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Varam Rifle Club ,Indian Rifle Club Association ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...