×

அமலாக்கத்துறை விசாரணை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி உள்பட 1000 பேர் மீது வழக்கு

சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதன்படி, தமிழக காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருந்தாலும், தடையை மீறி கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடையை மீறி நடந்ததால் கே.எஸ்.அழகிரி உள்பட 250 பேரை எழும்பூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதைதொடர்ந்து எழும்பூர் போலீசார் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட 1000 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்….

The post அமலாக்கத்துறை விசாரணை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி உள்பட 1000 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : K. S.S. ,Awakiri ,Chennai ,Delhi ,Sonia Gandhi ,National Herald ,Analakiri ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...