×

புஷ்பா 2 கிஸ்ஸிக் பாடல் இன்று ரிலீஸ்

ஐதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் இன்று வெளியாகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. இதில் பன்வார் சிங் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனம் கலந்த காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார் ஃபஹத் பாசில். தற்போது 2-ம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. உலகம் முழுக்க டிசம்பர் 5-ம் தேதி ‘புஷ்பா 2’ வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் நாடு முழுவதும் பெரும் ஹிட் ஆனது.

அதற்கு அப்பாடலில் ஆடிய சமந்தாவின் நடனமும் ஒரு காரணம். தமிழில் இப்பாடலை ஆண்ட்ரியா பாடியிருந்தார். இப்பாடல் ரீல்ஸ், ஷார்ட் வீடியோக்களாக பெரும் வைரல் ஆனது. இந்த நிலையில் ‘புஷ்பா 2’ படத்திலும் இதே போல ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. ‘கிஸ்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்பாடலில் ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இப்பாடல் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘ஊ சொல்றியா’ பாடலைப் போலவே இந்த பாடலும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

Tags : Kissick ,HYDERABAD ,KISSIK ,Allu Arjun ,Rashmika ,Fahad Fazil ,Sukumar ,Banwar Singh ,
× RELATED ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க...