×

ராஷ்மிகாவுடன் எப்போது திருமணம்? மவுனம் சாதிக்கும் விஜய் தேவரகொண்டா

ஐதராபாத்: தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் விஜய் தேவரகொண்டா, தற்போது ‘சஹிபா’ என்ற இந்தி ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார். இதை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது காதல் வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், ‘இப்போது எனக்கு 35 வயதாகிறது. நான் சிங்கிளாகவே இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? என்னுடன் நடித்த சக நடிகை ஒருவரை டேட்டிங் செய்திருக்கிறேன். எனவே, காதலிக்கப்படுவது எப்படிப்பட்ட உணர்வு என்று எனக்கு தெரியும். காதல் என்றால் என்னவென்றும் புரியும். எனது காதல் என்பது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ என்றார்.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் தீவிரமாக காதலிப்பது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு அடிக்கடி ஜாலியாக சுற்றுப் பயணமும் செய்து வருகின்றனர். பொதுவான இடங்களுக்குச் செல்வது, ஒருவரது வீட்டுக்கு ஒருவர் சென்று சாப்பிடுவது, அரட்டையடிப்பது போன்ற நிகழ்வுகள், அவர்கள் இரண்டுபேரும் தங்களின் காதல் விவகாரத்தில் உறுதியாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. விரைவில் அவர்களுடைய திருமணம் குறித்த அறிவிப்பு வௌியாகும் என்று டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவை எப்போது திருமணம் செய்வீர்கள் என்று சிலர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், மவுனமாக சென்றுவிட்டாராம் விஜய் தேவரகொண்டா.

 

Tags : Rashmika ,Vijay Devarakonda ,Hyderabad ,
× RELATED விஜய தேவரகொண்டா – ராஷ்மிகா ரகசிய நிச்சயதார்த்தம்?