×

கலை பண்பாட்டு கொண்டாட்ட தொடக்க விழா மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஆலோசனை வழங்க 5 குழுக்கள்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

ஸ்ரீபெரும்புதூர்: தண்டலம் ஊராட்சி அரசு பள்ளியில் நடந்த கலை பண்பாட்டு தொடக்க விழாவில், ‘கள்ளக்குறிச்சியில் சர்ச்சைக்குள்ளான பள்ளி விரைவில் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் ஆலோசனைகள் வழங்க 5 குழுக்கள் அமைக்கப்படுமென கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் தண்டலம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலை பண்பாட்டு கொண்டாட்டம் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா தலைமை தாங்கினார். தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி வரவேற்றார். பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் திட்ட விளக்கவுரை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்  ஆர்த்தி கருத்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு ராட்சத பலூன் பறக்கவிட்டு, முரசு கொட்டி விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் பாடல், மாணவர்கள் குழுப்பாட்டு, நடனம், பொம்மலாட்டம் மற்றும் நாட்டுப்புற கலைவடிவங்கள் நடைபெற்றது. பின்னர், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:  கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பள்ளியை திறக்க வேண்டும் என மாணவர்கள் கேட்டு கொண்டதற்கு, ஆலோசனை செய்து பள்ளி விவகார வழக்கு உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வரும் 29ம் தேதி நீதிமன்றம் கூடுவதாக, இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தீர்ப்பு வருவதற்கு ஏற்ப நடவடிக்கை உள்ளன. அதற்குப் முன்னதாகவே அப்பள்ளி அருகே உள்ள  5 அரசு பள்ளி மற்றும் 17 தனியார் பள்ளிகளிலும் மேலும், தனியார் கல்லூரியிலும் 40 வகுப்பறைகள் காலியாக உள்ளதால் அங்கு 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் வகுப்பு துவங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுற்றறிக்கை 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்படும்.இதில், அரசு பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளியில் 5 நாட்களுக்கு தினம் ஒரு மணி நேரம் தனியார் தொண்டு நிறுவனம், சமூக நலத்துறை, காவல்துறை உள்ளிட்டவர்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என 5 குழுக்களாக பிரிந்து ஆலோசனை வழங்கும் திட்டம் துவங்க உள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், தமிழிசை நடனக்கலைஞர் மற்றும் மாநில திட்டகுழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, திமுக ஒன்றிய செயலாளர் கோபால், ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி போஸ்கோ, மாவட்ட கவுன்சிலர் ராமமூர்த்தி, தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், துணை தலைவர் வேலாயுதம் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்….

The post கலை பண்பாட்டு கொண்டாட்ட தொடக்க விழா மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஆலோசனை வழங்க 5 குழுக்கள்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் appeared first on Dinakaran.

Tags : Art and Culture Celebration ,Minister Mahesh Poiyamozhi ,Sriperumbudur ,Thandalam Panchayat Government School ,Kallakurichi ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து