×

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் உறவில் விரிசல்: மகள் ஆராத்யா பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவில்லை

மும்பை: இந்திய அளவில், குறிப்பாக, தமிழ்த் திரையுலகில் நாளுக்கு நாள் விவாகரத்து பெருகி வருவது ரசிகர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரும், முன்னாள் உலக அழகி யுமான ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை கடந்த 2007ல் காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில், விரைவில் ஐஸ்வர்யா ராயை அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை அபிஷேக் பச்சன் மறுக்கவில்லை என்றாலும், பொதுவான நிகழ்ச்சிகளில் அவர் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து வருவது இல்லை. இருவரும் தனித்தனியாக வந்து சென்றுவிடுவதால், அவர்களுக்கு இடையே கருத்து தீவிர வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அம்பானி வீட்டு திருமணத்தில் அபிஷேக் பச்சன் குடும்பத்தினருடனும், ஐஸ்வர்யா ராய் மகளுடனும் தனியாக வந்து பங்கேற்றனர். இந்நிலையில், ஆராத்யா பச்ச னின் 13வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த சில போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ராய், ஆராத்யா பச்சனை டீனேஜ் ஆக வரவேற்பதாகச் சொல்லி, மறைந்த தனது தந்தை கிருஷ்ண ராயின் போட்டோ முன்பு தாய் மற்றும் மகளுடன் போஸ் தந்துள்ளார். எந்த போட்டோவிலும் அபிஷேக் பச்சன் தென்படவே இல்லை. அமிதாப் பச்சன் குடும்பத்தைச் சேர்ந்தோர் ஆராத்யா பச்சனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இடம்பெறவில்லை. இதனால் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது உறுதி என்பதாக, ரசிகர்கள் கமென்ட் வெளியிட்டு வருகின்றனர்.

 

Tags : Aishwarya Rai ,Abhishek Bachchan ,Aaradhya ,MUMBAI ,India ,
× RELATED விவாகரத்து செய்தி பரவி வரும் நிலையில் மீண்டும் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய்