×

19 வருடங்களுக்குப் பிறகு இணைந்த சூர்யா, திரிஷா

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் ஜோடியாக ‘விடாமுயற்சி’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் ஜோடியாக ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடிக்கும் திரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தவிர, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து ‘விஸ்வம்பரா’, மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ‘ராம்’, டொவினோ தாமஸ்சுடன் இணைந்து ‘ஜடென்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த 6 படங்களை தொடர்ந்து திரிஷா ஒப்பந்தமாகியுள்ள படத்தை நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார். இது சூர்யாவின் 45வது படமாகும். சூர்யா, திரிஷா இருவரும் இதற்கு முன்பு 2002ல் அமீர் இயக்கிய ‘மௌனம் பேசியதே’, 2005ல் ஹரி இயக்கிய ‘ஆறு’ ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இந்த நிலையில், 19 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சூர்யா, திரிஷா ஜோடியாக நடிக்க இருக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Tags : Suriya ,Trisha ,CHENNAI ,Ajith Kumar ,Mizh Thirumeni ,Adhik Ravichandran ,Kamal Haasan ,Mani Ratnam ,Simbu ,
× RELATED திரிஷா படத்திலிருந்து ரஹ்மான் திடீர் விலகல்