×

அஜித் சொன்ன வாழ்க்கை பாடம்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சென்னை: ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்திகேயன் அளித்த பேட்டி ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது: ‘அமரன்’ படத்தை 250, 300 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்பதற்காக உருவாக்கவில்லை. கதையும், கேரக்டரும், தயாரிப்பு நிறுவனமும், இயக்குனரும் நன்றாக இருந்ததால் நடித்தேன். இனிமேலும் 300 கோடி, 400 கோடி ரூபாயை தாண்ட வேண்டும் என்பதற்காக நடிக்க மாட்டேன். ஆனால், மெகா பட்ஜெட் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று சொல்ல மாட்டேன். ‘அமரன்’ படத்தின் சம்பளம் வேறு. ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் சம்பளம் வேறு. இதை தொடர்ந்து நான் நடிக்கும் படங்களுக்கான சம்பளமும் வேறு. ஒரு படத்தின் பட்ஜெட்டை பொறுத்துதான் எல்லாம் நடக்கும். தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்கக்கூடாது.

அஜித்குமார் சாரிடம் இருந்து வாழ்க்கை சம்பந்தப்பட்ட நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அவரிடம் இருந்து கிடைக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்கள் வேறு யாரிடமும் கிடைக்காது. வாழ்க்கைக்கு தேவையான நிறைய விஷயங்களை எனக்குச் சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் அவர் தெளிவாகச் சொல்வார். அது எனக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கும். அவருடனான சந்திப்புகள் எனக்கு அதிக தன்னம்பிக்கை தருகிறது.

* நஷ்டஈடு
‘அமரன்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், தனது போன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி, அதை சிவகார்த்திகேயனிடம் சாய் பல்லவி கொடுப்பார். அதில் இருந்தது தனது போன் நம்பர் என்றும், அதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 1.1 கோடி நஷ்டஈடு கேட்டும், சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வாகீசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tags : Sivakarthikeyan ,Chennai ,
× RELATED விஜய் பட டான்ஸ் மாஸ்டரின் புது பாய்ச்சல்