×

அரசு குடோன்களில் ரேஷன் அரிசி சுமார் 9 லட்சம் டன் வீணாகியுள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரம் இல்லாமல், உண்ண முடியாத நிலையில் இருப்பதால், வெகுண்டெழுந்த மக்கள் ஒன்றிய அரசுக்கு அனுப்பிய புகார்களின் அடிப்படையில், இந்திய வாணிப கழக அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான குடோன்களில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் மூலம் ெடல்டா மாவட்டங்களில் சுமார் 9 லட்சம் டன், அதாவது 92 கோடி கிலோ அரிசி மக்கள் பயன்படுத்துவதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதை கண்டுபிடித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அரசின் அலட்சியத்தால் சுமார் 9 லட்சம் டன் அரிசிக்கு உண்டான பல கோடி ரூபாய் பண இழப்பை அரசு என்ன செய்யப்போகிறது. இதேபோன்று தமிழகம் முழுவதும் எத்தனை லட்சம் டன் அரிசி வீணாகி உள்ளது என்பதையும் இந்திய உணவு கழகம் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post அரசு குடோன்களில் ரேஷன் அரிசி சுமார் 9 லட்சம் டன் வீணாகியுள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Government ,kudons ,Edapadi Palanisamy ,Chennai ,Interim General Secretary ,Edappadi Palanisamy ,Edapadi ,Palanisamy ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...