×

வடகால் கல்குவாரி குட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த செட்டிபுன்னியம், வடகால், காந்தலூர் பகுதியிலில் அதிகளவில் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள கல்குவாரி குட்டைகளில் அப்பகுதிகளில் இருந்து துணி துவைக்கவும், குளிப்பதற்கும் பெண்கள் வருவது வழக்கம். இந்நிலையில், வடகால் கல்குவாரி குட்டையில் 36 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக அவ்வழியாக டூவீலரில்  சென்ற நபர்  செங்கல்பட்டு தாலுகா போலீசுக்கு  தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா போலீசார் குட்டையில் மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து வழக்கு பதிவு செய்து இந்த பெண் எந்த பகுதியை சேர்ந்தவர்? குளிப்பதற்காக வந்த நீச்சல் தெரியாமல்  மூழ்கி இறந்தாரா?  கொலை செய்து தண்ணீரில் வீசினார்களா? தற்கொலையா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 தினங்களுக்கு முன்பு   இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது….

The post வடகால் கல்குவாரி குட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : North Kalquari pond ,Chengalpattu ,Setipunniam ,Vadakal ,Kandalur ,Kalquari ,Kalquari pond ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில்...