×

பள்ளி கலவரத்தின் போது, எடுத்துச் சென்ற பொருட்களை ஒப்படையுங்கள்…இல்லாவிடில் வழக்குப் பாயும் : தண்டோரா போட்டு கனியாமூரில் அறிவுறுத்தல்!!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தின் போது, எடுத்துச் சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்கக் கோரி கனியாமூர் கிராமத்தில் தண்டோரா மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 17ம் தேதி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இறுதியாக இது வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளிக்குள் புகுந்தவர்கள் அங்கிருந்த மேஜை, இருக்கைகள், ஏ.சி. இயந்திரங்கள், மின் விசிறிகள், ஏர் கூலர்கள், கணினி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தூக்கிச் சென்றனர். இந்த நிலையில் கலவரத்தின் போது, பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்கள் அனைத்தையும் திரும்பப் பெறும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், பள்ளியின் பொருட்களை வைத்திருப்பவர்கள் மீது வழக்கு பாயும் என்றும்  அவர்களும் கலவரம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சூறையாடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 9,10,12 வகுப்புகளை வேறு தனியார் பள்ளிகளில் நடத்தப்பட இருப்பதாகவும் 2 மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் வகுப்புகள் விரைவில் தொடங்கும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார். …

The post பள்ளி கலவரத்தின் போது, எடுத்துச் சென்ற பொருட்களை ஒப்படையுங்கள்…இல்லாவிடில் வழக்குப் பாயும் : தண்டோரா போட்டு கனியாமூரில் அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Kaniyamur ,Dandora ,Kallakurichi ,Tandora ,Kaniyamoor ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...