×

கனியாமூர் பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை; 2 ஹார்டு டிஸ்க்குகள் சிக்கின: தொடர்ந்து அதிகாரிகள் தீவிர சோதனை…!

கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி உயிரிழந்து வன்முறை நடந்த கனியாமூர் பள்ளியில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அப்பள்ளியை அடித்து நொறுக்கி, பஸ்களுக்கு தீவைத்து கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக விசாரிக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தனி விசாரணை குழுவை அமைத்துள்ளார். சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு தலைமையில் ஒரு எஸ்பி, 3 கூடுதல் எஸ்பிக்கள் அடங்கிய விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, இவ்விசாரணைக்கு டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகளை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளும்படி விசாரணை அதிகாரியான சேலம் டிஐஜியை அறிவுறுத்தினார். இதன்பேரில், இவ்விசாரணை பணிக்காக புலனாய்வில் நன்கு அனுபவம் கொண்ட காவல் அதிகாரிகள் குழுவை டிஐஜி தேர்வு செய்திருக்கிறார். அந்த போலீஸ் அதிகாரிகளை விசாரணை குழுவில் இணைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தர விட்டுள்ளார். இதன்படி இவ்விசாரணைக்குழுவில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் டிஎஸ்பிக்களான அம்மாதுரை (திருப்பத்தூர்), அண்ணாதுரை (திருவண்ணாமலை), ரவிச்சந்திரன் (ராணிபேட்டை), தையல்நாயகி (சேலம் ரூரல்), விஜயராகவன் (கிருஷ்ணகிரி), அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் (மயிலாடுதுறை) நியமிக்கப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர்களான பாலமுருகன் (வலவனூர், விழுப்புரம்), பாலகிருஷ்ணன் (சங்கராபுரம், கள்ளக்குறிச்சி), மகேஸ்வரி (கள்ளக்குறிச்சி ஏசிடியூ), சுமதி (உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி), தேவேந்திரன் (ரெட்டிச்சாவடி, கடலூர்), பிரகாஷ் (வேலூர்), பழனிமுத்து (வேலூர்), கவிதா (குற்றப்பிரிவு, திருவண்ணாமலை) , நாகராஜ் (தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் காஞ்சிபுரம் வாலாஜாபேட்டை ஏட்டு அரவிந்தன், விழுப்புரம் சைபர் கிரைம் போலீஸ்காரர் மணிமாறன், கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீஸ்காரர் பார்த்திபன் ஆகியோர் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். டிஐஜி பிரவீன்குமார் அபினபு தலைமையிலான இந்த விசாரணைக்குழுவினர் கலவரம் தொடர்பான விசாரணையை இன்று காலை தொடங்கியுள்ளனர். வன்முறை நடந்த கனியாமூர் பள்ளியில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை நடத்தி வருகின்றனர். சிறப்பு புலனாய்வு குழுவினருடன் தடயவியல் நிபுணர் மற்றும் கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்கின்றனர். சிறப்பு புலனாய்வு குழு ஆய்வில் சேதமடையாத 2 ஹார்ட் டிஸ்க்கள் கைப்பற்றப்பட்டது. சேதமடையாத 2 ஹார்ட் டிஸ்க்குகளை கண்டறியப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். …

The post கனியாமூர் பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை; 2 ஹார்டு டிஸ்க்குகள் சிக்கின: தொடர்ந்து அதிகாரிகள் தீவிர சோதனை…! appeared first on Dinakaran.

Tags : Kaniamoor School ,Kallakurichi ,Kaniyamur school ,District… ,Kaniyamoor School ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில்...