×

ஊரே பால் கொடுக்கும் ஓர் இரவு பூஜை

திருநல்லூர், தஞ்சாவூர்

திருநல்லூர் திருத்தலத்தில் அருள் பாலிக்கும்  ஈஸ்வரர் பஞ்சவர்ணேஸ்வரர். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள து. இவருக்கு கல்யாண  சுந்தரனார், பெரியாண்டேசுவரர் என்ற திருநாமங்களும் உண்டு. அம்பிகை ,கிரிசுந்தரி, கல்யாணசுந்தரி, பர்வதசுந்தரி எனும் திருநாமங்களுடன் அருள்பாலிக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற  காவிரி தென்கரைத்தலங்களில் இது 20வது தலம்.தலமரம் - வில்வம், தீர்த்தம் - சாகர தீர்த்தம்.  கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். இறைவன் சந்நதி மலைமேல் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன்  அழகான ராஜ கோபுரம் உள்ளது.  கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால்  ஒரு விசாலமான இடத்தில்  கவசமிட்ட கொடிமரமும், அதற்கு முன்னால் கொடிமர விநாயகரும்  உள்ளார்.  

இதையடுத்து வடதுபுறம் வசந்த மண்டபமும், தென்புறம் அமர்நீதி நாயனார் தராசுத் தட்டில் ஏறி  அமர்ந்த துலா மண்டபமும் உள்ளன. அம்பாள்  கிரிசுந்தரி தனி சந்நதியில்  தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.  எட்டு கைகளுடன் கூடிய காளி இங்கு அருள்புரிகிறாள்.இங்கு உள்ள சோமாஸ்கந்த  மூர்த்தி  திருவாரூர் தியாகராஜருக்கு ஈடாக உள்ளது.  மாசி மகத்தின் போது இவர் கோயிலுக்குள் உலா வருவார்.  மாடக்கோயிலின் படிகள் வழியாக  இவர் இறங்கும் போது  அடியார்கள் வெண்சாமரமும், விசிறியும் வீசுவார்கள்.  ஆனாலும் கூட பெருமாளின் முகத்தில்  வியர்வை துளிகள்  அரும்புவதைக் காணலாம்.

மேற்கு கோபுர வாயிலில் மேல்புறம்,  பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார்.  இந்த வடிவத்துடன் இத்தலத்திலும்,  காசியிலும் மட்டுமே  கணநாதர் வழிபடப்படுகிறார். ஆண்டுக்கொருமுறை இரவில் நடக்கும்  கணநாதர் பூஜை சிறப்பானது.  அன்றைய தினம் இந்த ஊரிலும்,  பக்கத்து  ஊரிலும் உள்ள மக்கள் தங்கள் பசு, ஒரு வேளை கறக்கும் பாலை  அப்படியே கொடுத்து இப்பூஜையில் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையை  பக்தர்கள் பார்க்க முடியாது.தலவிருட்சமான வில்வ மரம் மிகவும் பழமையானது. இதை “ஆதிமரம்’ என அழைக்கின்றனர்.


Tags : night pooja ,city ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்