×
Saravana Stores

கோவா சர்வதேச திரைப்பட விழா தங்கமயில் போட்டியில் ஆடுஜீவிதம்

பனாஜி: கோவாவில் ஆண்டு தோறும் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தாண்டும் வருகிற 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்து சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. அதே வேளையில் இந்தியத் திரைப்பட ஆளுமை, தங்கமயில், வெள்ளிமயில், சிறந்த இயக்குநர், நடிகர், நடிகை எனப் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் முக்கியத்துவம் வாய்ந்த விருதாக பார்க்கபடும் தங்க மயில் விருதுக்கு மொத்தம் 15 படங்கள் போட்டியிடுகின்றன.

இதில் மலையாளத்தில் இருந்து பிரித்விராஜ் நடிப்பில் ப்ளெஸ்ஸி இயக்கத்தில் பிரபல நாவலான ‘ஆடு ஜீவிதம்’ என்ற நாவலை மையப்படுத்தி அதே தலைப்பில் எடுக்கப்பட்ட ஆடுஜீவிதம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் ஆர்டிக்கல் 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பாலிவுட்டில் எடுக்கப்பட்ட ‘ஆர்டிகள் 370’ மற்றும் மற்றொரு இந்திப் படமான ராவ்சாஹேப் ஆகிய 3 இந்திய படங்களும் போட்டியிடுகின்றன.

 

Tags : Goa International Film Festival ,International Film Festival of India ,Goa ,
× RELATED நவம்பர் 20ம் தேதி கோவா பட விழா தொடக்கம்