சென்னை: விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி, அவரின் மனைவி இடையே சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சு நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயம் ரவி, – ஆர்த்தி ரவி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ரவி அறிவித்தார்.
இதையடுத்து, மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்தார்.
அவரின் மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இதனையடுத்து நீதிபதி இருவருக்கு இடையான பிரச்சினை தொடர்பாக குடுநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச இருவருக்கும் உத்தரவிட்டார். அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பாக விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இன்றே இரு தரப்பும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.