×

கலாமை புகழ்ந்த ஜனாதிபதி

புதுடெல்லி:  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக இந்திய இஸ்லாமிய கலாசார மையம் நடத்திய 4வது ஆண்டு ஏபிஜே அப்துல் கலாம் ஆசாத் நினைவு விழா கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசுகையில், ‘‘இஸ்லாமிய கலாசாரம் என்றதும் அப்துல் கலாம் நினைவுக்கு வருவார். இந்தோ-இஸ்லாமிய கலாச்சாரத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் கலாம். அவர் பள்ளி மாணவர்களை சந்திக்கும் பழக்கம் உள்ளவர். ஏனென்றால், நாட்டின் பொன்னான எதிர்காலத்தை எதிர்கால சந்ததியினரான அவர்கள் உருவாக்குவார்கள் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்தியாவின் எதிர்காலத்தை கட்டி எழுப்புவதில் நமது இளைஞர்களின் கடின உழைப்பு மற்றும் திறமை மீது கலாமை போன்று முழு நம்பிக்கை வைத்துள்ளேன்.இவ்வாறு ஜனாதிபதி பேசினார்….

The post கலாமை புகழ்ந்த ஜனாதிபதி appeared first on Dinakaran.

Tags : President ,New Delhi ,Abj Abdul ,Indian Islamic Cultural Centre ,Abdul Qalam ,
× RELATED மாபெரும் வெற்றியை தர வேண்டும்;...