×

கிரைம் திரில்லரில் உபாசனா

சென்னை: எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் ‘எனை சுடும் பனி’ கிரைம் திரில்லராக உருவாகிறது. விழித்திரு, என் காதலி சீன் போடுறா, வாகை ஆகிய படங்களில் நடித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், ‘எனை சுடும் பனி’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார்.

இவர்களுடன் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம் புலி, தானீஷ், சுந்தர்ராஜ், பில்லி முரளி ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம் ஷேவா இயக்குகிறார். ஒளிப்பதிவு வெங்கடேஷ், இசை அருள்தேவ், சண்டை பயிற்சி டேஞ்சர் மணி, படத்தொகுப்பு சி.எம்.இளங்கோவன், கலை நிர்மாணம் சோலை அன்பு, நடனம் சாண்டி, ராதிகா, பாடல்கள் ராம் ஷேவா, சரவெடி சரண், வசந்த். நிர்வாக தயாரிப்பு ஜீவா.

Tags : Upasana ,Chennai ,S. N. ,S Pictures ,Hemalatha Sundarraj ,Awake ,Natraj Sundarraj ,Sean Bodura ,
× RELATED அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்