×

திருப்பூர் அருகே பாஜக-வை சேர்ந்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவர் மதுபோதை தலைக்கேறிய நிலையில் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அருகே பா.ஜ.க வை சேர்ந்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவர் மதுபோதை தலைக்கேறிய நிலையில் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார்.பா.ஜ.க வை சேர்ந்த இவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.கடந்த 17-ம் தேதி பல்லடம் ராயர்பாளையத்தில் பா.ஜ.வின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட,மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மாதப்பூர் பஞ்சாயத்து தலைவருமான அசோக்குமார் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மாதப்பூரில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களை அழைத்து வந்து அண்ணாமலையால் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.கூட்டத்தை முடித்து கட்சி தொண்டர்களுடன் சென்ற மாதப்பூர் பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார் பொங்கலூர் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் மது அருந்த சென்றுள்ளார். அங்கு மது போதை தகைக்கேறிய நிலையில் இருந்த அவர் நடக்கமுடியாமல் இருந்துள்ளார். உணவருந்த நண்பர்கள் அழைத்த நிலையில் போதை தலைக்கேறிய நிலையில் எழுந்து செல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவருடன் வந்த கட்சி தொண்டர்கள் நடக்க முடியாத அவரை தூக்கி செல்கின்றனர்.தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வைராலகி வருகின்றது. பஞ்சாயத்து தலைவரும்,மாவட்ட செயற்குழு உறுப்பினருமான பா.ஜ.க கட்சி நிர்வாகி மதுபோதையில் இருந்த சிசிடிவி காட்சிகள் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….

The post திருப்பூர் அருகே பாஜக-வை சேர்ந்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவர் மதுபோதை தலைக்கேறிய நிலையில் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல் appeared first on Dinakaran.

Tags : Bajaga ,Mathapur Panchayat ,Tiruppur ,Madhapur Panchayat ,Tiruppur Pallada ,J.J. Leader ,Ghawa ,Bhajaga-Wi ,
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...