×

ஊத்துக்கோட்டையில் அடைக்கல மாதா தேவாலயத்தில் 33ம் ஆண்டு தேர்ப்பவனி விழா

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டையில் உள்ள புனித அடைக்கல மாதா தேவாலயத்தில் 33ம் ஆண்டு தேர்ப்பவனி திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடைக்கல மாதா ஆலய பங்கு தந்தை ஆசீர் அற்புதராஜ் தலைமை தாங்கினார். பாதிரியார்கள் அருள்ராஜ், சார்லஸ் ஆனந்தராஜ், ஆரோக்கிய வேளாங்கண்ணி முன்னிலை வகித்தனர். தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஜெபமாலை மற்றும் திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை அடைக்கல மாதாவின் திருவுருவம் பொறித்த சிலை டிராக்டரில் வைத்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. இந்த தேர் பவனி அடைக்கல மாதா ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ரெட்டி தெரு, செட்டி தெரு, பஜார் வீதி, திருவள்ளூர் சாலை, அண்ணாநகர், நாகலாபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று தேவாலயத்தை அடைந்தது. முன்னதாக மாதா ஊர்வலத்தின்போது வழிநெடுகிலும் மக்கள் ஆர்வமுடன் பூ மாலைகள், கற்கண்டு, மெழுகு வர்த்தி ஆகியவைகளை வழங்கினர். நேற்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் பங்கு பேரவை தலைவர் பாக்கியராஜ், செயலாளர் சேவியர், பொருளாளர் நவின் ஜோ, நிர்வாகிகள் செல்வகுமார், ராஜன், ஜான்சன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்….

The post ஊத்துக்கோட்டையில் அடைக்கல மாதா தேவாலயத்தில் 33ம் ஆண்டு தேர்ப்பவனி விழா appeared first on Dinakaran.

Tags : Adhikala Mata Church ,Oothukottai ,33rd annual ,Therpavani festival ,St. Adhikala Matha Church ,
× RELATED ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு