×

கோயில் தீமிதி திருவிழாவில் பாடலுக்கு நடனமாடிய வாலிபருக்கு கத்திக்குத்து: 3 பேர் கைது

சென்னை: அசோக் நகரில் கோயில் தீமிதி திருவிழாவில் பாடலுக்கு நடனமாடிய போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவருக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை அசோக் நகர் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் ஆடி முதல் நாள் என்பதால் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதை பார்க்க அப்பகுதி மக்கள் மற்றும் வாலிபர்கள் அதிகளவில் கோயில் முன்பு திரண்டனர். திருவிழாவை பார்க்க மேற்கு மாம்பலம் காந்தி தெருவை சேர்ந்த நந்தகோபால் (25) தனது நண்பர்களுடன் வந்துள்ளார். திருவிழா என்பதால் கோயிலில் சாமி பாடல்கள் ஒலிக்கப்பட்டது.பாடலுக்கு ஏற்றப்படி நந்தகோபால் தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். அப்போது மேற்கு மாம்பலம் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த விஜய் (23) என்பவரின் காலை மிதித்ததால், நந்தகோபாலுக்கும், விஜய்க்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விஜய் தனது நண்பர்கள் கார்த்திக் மற்றும் தினேஷ்குமாருடன் சேர்ந்து நந்தகோபாலை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். மேலும், ஆத்திரம் தீராத விஜய், மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தகோபாலை சரமாரியாக குத்திவிட்டு நண்பர்களுடன் தப்பினார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நந்தகோபாலை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில்  அனுமதித்தனர். இதுகுறித்து, அசோக் நகர் போலீசார் வழக்கு பதிந்து, விஜய் அவரது நண்பர்கள் கார்த்திக், தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது….

The post கோயில் தீமிதி திருவிழாவில் பாடலுக்கு நடனமாடிய வாலிபருக்கு கத்திக்குத்து: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Temple Themiti festival ,Chennai ,Temple Temiti festival ,Ashok Nagar ,Showler ,Temple Themidi festival ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?