×
Saravana Stores

படிக்கட்டில் தவறி விழுந்து விஜய் தேவரகொண்டா காயம்

ஐதராபாத், நவ.10: நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது கவுதம் தின்னானுரி இயக்கத்தில் தனது 12வது படத்தில் நடித்து வருகிறார். அவரது முந்தைய படங்கள் பெரிய தோல்வி என்பதால் மீண்டும் கம்பேக் கொடுக்க விஜய் தேவரகொண்டா முயற்சித்து வருகிறார். அடுத்த வருடம் மார்ச் 28ம் தேதி இந்த படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று கல்லூரி விழா ஒன்றுக்கு விஜய் தேவரகொண்டா சென்றார். நிகழ்ச்சி முடித்துவிட்டு, விஜய் தேவரகொண்டா மாடிப்படியில் நடந்து வரும்போது தவறி விழுந்து காயமடைந்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவரது இடது காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் 2 நாட்கள் அவர் ஓய்வில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags : Vijay Devarakonda ,Hyderabad ,Gautam Dinnanuri ,
× RELATED ராஷ்மிகாவுடன் எப்போது திருமணம்? மவுனம் சாதிக்கும் விஜய் தேவரகொண்டா