×

ராஜமவுலியிடம் சூர்யா உருக்கம்: உங்க பட வாய்ப்பு மிஸ் பண்ணிட்டேனே

ஐதராபாத், நவ.10: ‘கங்குவா’ படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற அப்படத்தின் தெலுங்கு புரமோஷனில் இயக்குனர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது மேடையில் பேசிய சூர்யா, ‘நான் அந்த டிரெயினை மிஸ் பண்ணிவிட்டேன். ஆனால் இன்னும் அதே ரயில் நிலையத்தில் தான் நின்று கொண்டு இருக்கிறேன். கண்டிப்பாக ஒரு நாள் அந்த ரயிலை பிடித்துவிடுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என ராஜமவுலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டது பற்றி பேசினார். ராஜாமவுலி இயக்கத்தில் வெளியான ‘மகதீரா’ திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது சூர்யா தான்.

சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. பின்னர் வந்து பேசிய இயக்குனர் ராஜமவுலி, ‘மகதீரா பட வாய்ப்பை நீங்கள் மிஸ் பண்ணவில்லை. நான் தான் உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன்’ என்று கூறியதும் சூர்யா உற்சாகத்தில் பூரித்துப் போனார். இதையடுத்து ‘கங்குவா’ படக்குழுவுக்கும் ராஜமவுலி தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags : Suriya Urukkam ,Rajamouli ,Hyderabad ,Surya ,
× RELATED இரண்டாவது படத்திலேயே இயக்குனரான நடிகை