×

ரெட்டிப்பாளையம் கல்லணைக்கால்வாயில் இருகரைகளையும் தொட்டு ஓடும் காவிரி நீர்-பாலத்தில் நின்று பொதுமக்கள் கண்டு ரசிப்பு

வல்லம் : மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ரெட்டிப்பாளையம் கல்லணைக்கால்வாயில் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு ஆர்ப்பரித்து ஓடுகிறது. பாலத்தில் நின்று பொதுமக்கள் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை கண்டு ரசித்தனர்.மேட்டூர் அணையிலிருந்து நேற்று காலை 1.31 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால், தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் கல்லணைக்கால்வாய் ஆற்றில் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூரை நோக்கி பெருக்கெடுத்து வந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரத்து கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் வினாடிக்கு 1.31 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ரெட்டிப்பாளையம் கல்லணைக்கால்வாயில் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு ஆர்ப்பரித்து ஓடுகிறது. பாலத்தில் நின்று பொதுமக்கள் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை கண்டு ரசித்தனர்….

The post ரெட்டிப்பாளையம் கல்லணைக்கால்வாயில் இருகரைகளையும் தொட்டு ஓடும் காவிரி நீர்-பாலத்தில் நின்று பொதுமக்கள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Tags : Cauvery water-bridge ,Redtipalayam Kallanay Canal ,Vallam ,Mettur ,Reddipalayam Kallanai canal ,Rettipalayam Kallanai Canal ,
× RELATED வல்லம் பேரூராட்சியில் சட்டத்திற்கு...