×

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி

திருவனந்தபுரம்: துபாயிலிருந்து  கேரளா வந்த கொல்லத்தை சேர்ந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய்க்கான  அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவரது உமிழ்நீர் மாதிரி பூனாவிலுள்ள ஒன்றிய அரசின் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதித்தபோது அம்மை நோய் இருப்பது உறுதி  செய்யப்பட்டது.  இந்த நிலையில் கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடந்த  2 தினங்களுக்கு முன்பு துபாயிலிருந்து மங்களூரு விமான நிலையம் வழியாக வந்த  கண்ணூரை சேர்ந்த 40 வயதான நபருக்கு நேற்று குரங்கு அம்மை நோய்க்கான  அறிகுறிகள் தென்பட்டன. உடனே அவர் கண்ணூர் பரியாரம் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உமிழ்நீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதே போல, துபாயில் இருந்து ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்தினர்  வந்துள்ளனர். அவர்களில் ஒரு சிறுமிக்கு குரங்கு அம்மை  போன்ற அறிகுறிகள் தோன்றியது. எனவே, அந்த சிசிறுமியின் ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் சிறுமிக்கு குரங்கு அம்மை பாதிப்பில்லை என்பது நேற்று உறுதியானது….

The post கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kollam ,Dubai ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்