×

ஆபாச வீடியோ வெளியான நிலையில் அம்மன் வேடத்தில் ஓவியா நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: ஓவியா அடுத்ததாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து ‘சேவியர்’ என்கிற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சாண்டோ ஸ்டுடியோ தயாரிக்கிறது. ஜான் பால் ராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஓவியா வர்ணா என்கிற கதாபாத்திரத்திலும், ஹர்பஜன் சிங் டாக்டர் ஜேம்ஸ் மல்ஹோத்ரா கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக படக்குழு போஸ்டர் மூலம் தெரியபடுத்தி உள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. போஸ்டரில் அம்மன் வேடத்தில் ஓவியா காட்சியளிக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், அதிர்ச்சி அடைந்தனர். சமீபத்தில்தான் ஓவியா இருப்பதாக கூறிய ஆபாச வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் இருப்பது நானில்லை என ஓவியா மறுக்கவில்லை. வீடியோ நேரம் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் சிலர் கூற, ‘இருப்பதை பார்த்து என்ஜாய் பண்ணுங்க ப்ரோ’ என ஓவியா கமென்ட் போட்டிருந்தார். அவரது இந்த கமென்ட், சமூக வலைத்தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீஸ் கமிஷனரிடம் ஓவியா புகார் அளித்தபோதும், அந்த வீடியோவில் இருப்பது நானில்லை என்று கூறவில்லை.

வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டுமே கூறியிருந்தார். இந்நிலையில் அவர் அம்மன் வேடத்தில் இருப்பதை பார்த்த நெட்டிசன்கள், இந்த புகைப்படங்களை நீக்க வேண்டும் என்றும் மகளிர் அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகின்றனர்.

Tags : Oviya ,Chennai ,Harbhajan Singh ,Santo Studio ,John Paul Raj ,Harbhajan ,Oviya Varna ,
× RELATED காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை...