×

7-வது நாளாக வெள்ளம் நீரில் புதுச்சேரி ஏனாம்; மக்கள் கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் ஏற்பட்டுருக்கும் கடும் வெள்ள பெருக்கல் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் நீரில் சூழ்ந்துள்ளது. தற்பொழுது ஆந்திரா, தெலுங்கானா தொடர்ந்து மலை பெய்து வருவதால் கோதாவரி ஆற்றில் வெள்ளம் பேருக்கு ஏற்பட்டு ஏனாம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ததுள்ளது. குறிப்பாக  ஏனாம் பகுதியில் தோலேஸ்வரம், பாலயோகி நகர் உள்ளிட்ட 20-துக்கும் மேற்பட்ட பகுதியில் 3000 மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் கோதாவரி ஆற்றில் வரலாற்று காணாத அளவுக்கு அதிக வெள்ளம் பேருக்கு ஏற்பட்டுருப்பதால் தற்பொழுது வரை 34 லட்சம் கனஆடி தண்ணீர் கோதாவரி ஆற்றில் இருந்து வருவதால், இது மேலும் அதிகரிக்கும் என்று கரையோரம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றார்கள். அரசு சார்பில் மீட்பு பணி நடவடிக்கை நடைபெற்று வருகின்றது. 2000 மேற்பட்ட மக்களை மீட்டு அரசு முகாமில் தங்கப்பட்டு வருகிறார்கள். ஆந்திரா மாநிலம் தோளீஸ்வரம் தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் 27 லட்சம் கனஅடி தண்டியுள்ளது. 7 நாட்கள் வெள்ளத்தில் மக்கள் தவித்து வருகின்றார்கள். புதுச்சேரி அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரும் தங்களை கண்டுகொள்ள வில்லை என கடும் குற்றசாட்டு வைத்துள்ளனர். வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்மையான கோரிக்கை வைத்துள்ளார். வெள்ளத்தில் பாம்புகள் அடித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளார். …

The post 7-வது நாளாக வெள்ளம் நீரில் புதுச்சேரி ஏனாம்; மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Enam ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!