×

ஊத்துக்கோட்டையில் உள்ள நாகவல்லிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பணிமனை அருகில் உள்ள நாகவல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி 15ம் தேதி கணபதி பூஜை, அக்னி பிரதிஷ்டை, நவக்கிரக ஹோமம் ஆகியவையும் மாலை வாஸ்து பூஜையும்,  வாஸ்து ஹோமம் ஆகியவையும் நடத்தப்பட்டது. நேற்று கரிகோலம் திரிதியை கால பூஜை, ஜலதிவ்யாசம்,  மாலை சதுர்த்த கால பூஜையும்,  யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு நாகாலம்மன் பிரதிஷ்டை ஹோமம்,  நாடி சந்தனம் ஆகியவையும் காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள்ளாக யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்துச்செல்லப்பட்டு குமார் ஐயர் தலலைமையில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன்பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினர்….

The post ஊத்துக்கோட்டையில் உள்ள நாகவல்லிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Kumbaphishekam ,Nagalliamman Temple ,Uthukkotte ,Nagavalli Amman Temple ,Uthukkotta ,Ganapathi ,Nagavallyamman Temple ,Utututukkotam ,
× RELATED பொன்னமராவதி அருகே சூரப்பட்டி தாதையா கோயில் கும்பாபிஷேகம்