×

நடித்தாலும் ஒளிப்பதிவை விட மாட்டேன்: நட்டி நச்

சென்னை: ஒளிப்பதிவாளராக இருந்த நட்டி என்கிற நட்ராஜ், நடிகர் ஆன பிறகு படு பிசியாகிவிட்டார். ‘மகாராஜா’ படம் அவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை தந்தது. இப்போது பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தபடி, ‘ஆண்டவன் அவதாரம்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவர் கூறியது: தீபாவளிக்கு திரைக்கு வந்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்தில் பூமிகாவின் கணவராக நடித்திருக்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பப் பாங்கான ஒரு படம். இதில் காமெடியும் செய்திருக்கிறேன். வெரைட்டியான குணாதிசயங்களையும் காட்டியுள்ளேன். படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இப்போது ‘ஆண்டவன் அவதாரம்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். மற்றொரு படத்தில் காமெடி கதையில் ஹீரோவாக நடிக்கிறேன். ‘கங்குவா’ படத்தில் சூர்யாவுடன் நடித்துள்ளேன். ஆர்.ஜே.பாலாஜியுடன் நடித்திருக்கிறேன். தொடர்ந்து படங்களில் பிசியாக நடிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. அதே சமயம், ஒளிப்பதிவை விட மாட்டேன். இப்போதைக்கு ஒளிப்பதிவில் கமிட் ஆகவில்லை. காரணம், ஒரு படத்துக்கு ஒளிப்பதிவுக்காக சென்றால் ஒரு வருடம் ஆகிவிடும். ஏற்கனவே பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதால், அந்த கமிட்மென்ட்களை நிறைவேற்றி ஆக வேண்டும்.

‘மகாராஜா’ படம் அதில் நடித்த அனைவருக்குமே திருப்புமுனையை தந்தது. படம் உருவாகும்போதே, நிதிலனிடம் சொன்னேன், இப்படம் வேற மாதிரியான ரீச்சை தரும் என்று. ஒரு நேரடி தமிழ் படத்தை வட இந்திய ரசிகர்களும் கொண்டாடி, இந்த தமிழ் படத்தை பான் இந்தியா படமாக அவர்கள் மாற்றியிருக்கிறார்கள். ஒளிப்பதிவில் இருந்ததால் டைரக்டர் ஆக வேண்டும் என நினைக்கவில்லை. இப்போதைக்கு நடிப்பில் பல படங்கள் இருப்பதால் டைரக்‌ஷன் பற்றி யோசிக்கவில்லை. இவ்வாறு நட்டி கூறினார்.

Tags : Nutty Nach ,CHENNAI ,Natti ,Natraj ,
× RELATED ‘ரெட்ட தல’க்கு நன்றி சொன்ன சித்தி இத்னானி