×

மதுராந்தகம் நகரில் பொதுமக்களை அலைகழிக்கும் வங்கிகள்: வார இறுதியில் பணம் இல்லாத ஏடிஎம்கள்

மதுராந்தகம்: மதுராந்தகம் நகரில், என்ட்ரி மற்றும் பணம் எடுத்தல் உள்பட பல்வேறு வகையில் அலைகழிக்கும் வங்கிகளால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், நகரில் உள்ள அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகளில் ஏடிஎம்களில் பணம் இருப்பு இல்லாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை இருந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளை மதுராந்தகம் நகரம் மட்டுமல்லாது சுற்றியுள்ள ஏராளமான கிராமப் பகுதிகளை சேர்ந்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதில், பெரும்பான்மையாக அரசின் நூறு நாள் வேலை திட்ட பயனாளிகளும், இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். குறிப்பாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்தான் அதிக மக்கள் கணக்கு வைத்துள்ளனர். ஆனால், அவரவர் வங்கி கணக்கில் உள்ள பண இருப்பு உள்ளிட்ட விவரங்களை சிறிதோ அல்லது பெரிய தொகையோ  தெரிந்து கொள்ள, மக்கள் நடையாய் நடப்பதுதான், தற்போதும் வேடிக்கையாக நடந்து வருகிறது. இதில் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்கு எப்படி ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது என தெரிவதில்லை. இதனால், ஏராளமான கிராம மக்கள் ஏடிஎம் கார்டு பயன்படுத்தாத நிலையில் உள்ளனர். வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள, தங்களின் வங்கி புத்தகத்தை எடுத்துக்கொண்டு, வங்கிக்கு சென்று அதில் என்ட்ரி போட்டு கொடுக்க சொல்லி கேட்டால், உடனடியாக என்ட்ரி போட்டு கொடுக்கப்படுவதில்லை. பல வங்கிகளும் அந்த சாதாரண மக்களின் நிலை புரிந்து கொள்ளாமல் தற்போது மிஷின் வேலை செய்யவில்லை,  கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை என ஏதோ ஒரு காரணத்தை கூறி வாடிக்கையாளர்களை  திருப்பி அனுப்புவதில் உறுதியாக இருக்கின்றனர். இது போன்ற சாதாரண விவரங்களை பெறுவதற்கு கூட,  சில நாட்களாகிளும் வங்கிக்கு வர வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால், வாடிக்கையாளர்களூக்கு வீண் அழைச்சல் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி ஒருசில வங்கிகளில் வாடிக்கையாளர்களை மதிப்பதோ, அமர இருக்கை போடுவதும் கிடையாது.  காத்திருக்கும் இடத்தில் பேன் கூட இருப்பதில்லை. புழுக்கத்தில் உடல் நனைந்து காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். பொதுமக்களுக்காக செயல்படும் வங்கிகள், அலுவலர்களின் நலனில் காட்டும் அக்கறையை, சிறிதளவு வாடிக்கையாளர்கள் நலனிலும் கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இது மட்டுமின்றி நகரில் இயங்கும் பெரும்பாலான வங்கி ஏடிஎம்களில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் பணம் இருப்பதில்லை. ஏடிஎம்கள் பூட்டப்பட்டுள்ளன. பல மாதங்களாக இதேநிலை தொடர்கிறது. இது போன்ற குறைகளை வங்கிகள் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் எனவும் வங்கி வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள, தங்களின் வங்கி புத்தகத்தை எடுத்துக்கொண்டு,  வங்கிக்கு சென்று அதில் என்ட்ரி போட்டு கொடுக்க சொல்லி கேட்டால், உடனடியாக  என்ட்ரி போட்டு கொடுக்கப்படுவதில்லை. சில வங்கியில் வங்கி புத்தகத்தில் என்ட்ரி செய்வது இல்லை….

The post மதுராந்தகம் நகரில் பொதுமக்களை அலைகழிக்கும் வங்கிகள்: வார இறுதியில் பணம் இல்லாத ஏடிஎம்கள் appeared first on Dinakaran.

Tags : Madurathangam ,Madhurandhakam ,
× RELATED மதுராந்தகம் அரசு மருத்துவமனையில்...