×

3 வாலிபர்களுக்கு குண்டாஸ்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (21), நல்லூர் பகுதியைச சேர்ந்த விக்னேஷ் (எ) எலி அப்பு (22), இவர்கள் இருவர் மீதும் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதேபோல, மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரசங்கால் பகுதியை சேர்ந்த கோபி (எ) கோபிநாத் (33). இவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. மூவரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மணிமங்கலம் உதவி கமிஷனர் ரவி, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமுல்ராஜுக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து, தாம்பரம் மாநகர கமிஷனர் அமுல்ராஜ் மேற்கண்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்….

The post 3 வாலிபர்களுக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Yuvraj ,Midveerapattu ,Somangalam ,Kanchipuram district ,Nallur ,
× RELATED பேக்கரியில் கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்