×

அதிமுக அலுவலகம் மீது தாக்குதல் விவகாரம்; 14 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக அலுவலகம் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் கைதான 14 பேரின் ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அவற்றை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வானகரத்தில் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்குவதற்கு முன் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 400 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த 14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஆர்.வி.சீனிவாசன் உள்பட 14 பேரும் ஜாமின் கேட்டு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி, ஜாமீன் மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்….

The post அதிமுக அலுவலகம் மீது தாக்குதல் விவகாரம்; 14 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : AICC ,iCourt ,Chennai ,Office of the High Court ,Dinakaran ,
× RELATED பெண் வழக்கறிஞர் மீது பதிவு...