×

புதுமுகங்களின் தென் சென்னை

 

சென்னை: தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் ‘தென் சென்னை’. இதில் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், ‘பொன்னியின் செல்வன்’ நாடக புகழ் இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர்.

மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயர்ச்சிகளில் இறங்கியுள்ளார். “டாடா” ஜென் மார்டின், இசை. ஒளிப்பதிவு, சரத்குமார். படத்தொகுப்பு, இளங்கோவன். இப்படதின் போஸ்டர் லுக்ஸ், பாடல் மற்றும் டிரெய்லர் சமீபதில் இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

Tags : Ranga ,Rhea ,South Chennai ,Nitin Mehta ,
× RELATED அறிவாளர் பேரவை சிறப்பு கூட்டம்