×

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.69 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

தாம்பரம்:  மேற்கு தாம்பரம், பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (32). இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், காசான்பட்டியைச் சேர்ந்த அர்ஜூன்பாண்டி (27) என்பவர் முகநூல் வாயிலாக அறிமுகமாகி உள்ளார். இதனைதொடர்ந்து, தனக்கு அறநிலையத் துறையில் அதிகாரிகளை தெரியும். எனவே, பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக கூறி, குமரேசனிடம் அர்ஜூன் பாண்டி,  ஆசை வார்த்தை கூறினார். மேலும், தான் பலருக்கு   வேலை வாங்கி கொடுத்ததற்கு ஆதாரமாக, புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை  குமரேசனுக்கு அர்ஜூன் பாண்டி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.இதை நம்பிய  குமரேசன் சிறிதுசிறிதாக கூகுள் பே மற்றும் வங்கி கணக்கு மூலம் ₹1.69 லட்சம் வரை அர்ஜூன் பாண்டிக்கு அனுப்பி உள்ளார். பணத்தை வாங்கிய அர்ஜூன் பாண்டி அதன்பின் குமரேசனின் செல்போன் அழைப்பை எடுக்காததுடன், வேலை வாங்கி கொடுக்காமல் அலைக்கழித்துள்ளார். இதனை அடுத்து குமரேசன் பணத்தை திருப்பி கேட்டதற்கு அவரை அர்ஜூன் பாண்டி மிரட்டி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த குமரேசன் இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்தனர். மேலும், நேற்று திண்டுக்கல் சென்று, அங்கு பதுங்கி இருந்த அர்ஜூன்பாண்டியை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல்  சிறையில் அடைத்தனர்….

The post அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.69 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Kumaresan ,West Tambaram, Burma Colony ,Oragad ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...