×

கதறி அழுத ரசிகையை சமாதானப்படுத்திய துல்கர்

சென்னை: பட விழாவில் கதறி அழுத ரசிகையை சமாதானப்படுத்தினார் துல்கர் சல்மான். சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் துல்கர் சல்மான் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி நடந்த இடத்தில் பெண் ரசிகை வந்திருந்தார். துல்கர் சல்மானை பார்த்ததும் அவர் உணர்ச்சிவசப்பட்டு அழத் தொடங்கினார். பின்பு தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே துல்கர் சல்மானை பார்த்து உங்களை கட்டியணைக்க வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தினார். உடனே அந்த ரசிகையை துல்கர் சல்மான் அழைத்து கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தி, ‘இனி அழக்கூடாது’ என அறிவுறுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரசிகை, துல்கர் சல்மான் என்னுடைய அண்ணா போல என்றும் அவரை பார்த்ததும் ரொம்ப எமோஷ்னலாகி விட்டேன் என்றும் இப்போது சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags : Dulquer ,Chennai ,Dulquer Salmaan ,
× RELATED ஜனவரி 16ல் ஜூலி காதல் திருமணம்