×

விஜய் தேவரகொண்டாவை சந்திப்பதை தவிர்த்த ராஷ்மிகா

ஐதராபாத்: கடந்த 2021ல் சுகுமார் இயக்கத்தில் திரைக்கு வந்து ஹிட்டான ‘புஷ்பா’ என்ற பான் இந்தியா படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்திருந்தனர். முக்கிய வேடங்களில் பஹத் பாசில், சமந்தா நடித்திருந்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். தற்போது சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தின் 2வது பாகம் உருவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடையாத நிலையில், வரும் டிசம்பர் 6ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

தற்போது ஒருநாள் முன்னதாக, டிசம்பர் 5ம் தேதியே படம் வெளியாகிறது. ‘புஷ்பா 2’ படத்தின் ஓடிடி, சாட்டிலைட், இசை உரிமைகள் விற்கப்பட்டு விட்டன. படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்டுக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கியுள்ளது. பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா மந்தனா, இப்படத்துக்காக அடிக்கடி ஐதராபாத் வந்து சென்ற நிலையில், விஜய் தேவரகொண்டாவை அவர் சந்திக்காமல் தவிர்த்துவிட்டதாக விஷயம் அறிந்தவர்கள் சொல்கின்றனர். அப்படி என்றால், ராஷ்மிகா மந்தனா வேறு யாரையாவது காதலிக்கிறாரா என்று நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

Tags : Rashmika ,Vijay Devarakonda ,Hyderabad ,Allu Arjun ,Rashmika Mandana ,Sukumar ,Bahad Basil ,Samantha ,Devisree Prasad ,
× RELATED விஜய தேவரகொண்டா – ராஷ்மிகா ரகசிய நிச்சயதார்த்தம்?