×

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அனைத்து பணிகளும் வரும் 20ம் தேதிக்குள் முடியும்; அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

சென்னை: மாமல்லபுரம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக,  நடந்து வரும் பணிகள் அனைத்தும் வரும் 20ம் தேதிக்குள் முடிந்துவிடும் என அமைச்சர் மெய்யநாதன் கூறினார். சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். பின்னர், அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இதுதொடர்பாக, அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள் இதுவரை 80 சதவீதம் முடிந்துள்ளது.  வரும் 20ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும். தற்போது, 140 நாடுகளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு இன்னும் 2 தினங்களில் விசா வழங்கப்பட்டு விடும். வீரர்கள் 23ம் தேதி முதல் வர உள்ளனர். 47 வகையான உணவுகள் தயார் செய்யப்பட உள்ளது. போட்டிக்கு வரும் அனைத்து வீரர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிந்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி வைத்து அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மட்டுமே போட்டியை காண அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. போட்டி தொடங்கியதும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற நாட்களில் 4 மணிக்கு போட்டி நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும். போட்டிகள் அனைத்தும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நடக்க உள்ளது. இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் பேசினார். தொடர்ந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில், ‘‘மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அருகில் உள்ள புராதன சின்னங்களை நாங்களே அழைத்துச் சென்று சுற்றி காட்ட உள்ளோம். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல வீரர்கள் விருப்பப்பட்டால் அழைத்து செல்லப்படுவார்கள்’’ என்றார்….

The post சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அனைத்து பணிகளும் வரும் 20ம் தேதிக்குள் முடியும்; அமைச்சர் மெய்யநாதன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : International Chess Olympiad ,Minister ,Meyanathan ,Chennai ,Mamallapuram International Chess Olympiad ,Mayanathan ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...